search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வீரர்கள்"

    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGames2018
    ஆலந்தூர்:

    இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வருண் தக்கார், கணபதி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் வர்ஷா, சுவேதா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

    பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 4 பேரும் நேற்று இரவு நாடு திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை பெற்றோர், நண்பர்கள், தமிழ்நாடு செய்லிங் அசோசியேசன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    அப்போது வருண் தக்கார் பேசுகையில், தான் 8 வருடமாக பயிற்சி எடுப்பதாகவும், இப்போட்டிக்காக தான் பள்ளிப்படிப்பினை பாதியில் கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.

    கணபதி கூறுகையில், “இம்முறை வெண்கலம் வென்றதாகவும், அடுத்த முறை தங்கம் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த விளையாட்டுக்கு போதுமான விளம்பரம் இல்லை என வருத்தம் தெரிவித்த அவர் இந்த வெற்றியை முதலில் தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.

    தொடர்ந்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வீரர், வீராங்கனைகள் பகிர்ந்து கெண்டனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

    ×